உழவர்கரை தொகுதியில் சாலை பணி துவக்கம்
புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பில் சாலைகள் மேம்படுத்தும் பணியினை சிவசங்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.உழவர்கரை தொகுதி அன்னை தெரசா நகர், அருள் நகர், திருமலை வாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் உட்புற சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர்கள் சிவக்குமார், தேவர், குலோத்துங்கன், அருண்ஆனந்த் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.