உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலை பணி துவங்கியது

 சாலை பணி துவங்கியது

புதுச்சேரி: நெல்லித்தோப்பு மார்க்கெட் வீதியில் புதிய சிமென்ட் சலை பணியை நேரு எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நெல்லித்தோப்பு பகுதியில், கடந்த 2024-2025 ஆண்டிற்கான எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பில், புதிய சிமென்ட் சாலை மற்றும் இருபுற கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிகள் புதுச்சேரி நகராட்சி சார்பில், நேற்று துவங்கியது. நேரு எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் குப்புசாமி, ஒப்பந்ததாரர் கிருஷ்ணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை