மேலும் செய்திகள்
ரூ.8 லட்சத்தில் சிமென்ட் சாலை
05-Sep-2025
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில், 1.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஓடைவெளி - சின்னவீராம்பட்டினம் சாலை அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். மணவெளி தொகுதி, ஓடைவெளி - சின்ன வீராம்பட்டினம் 3.5 கிலோ மீட்டார் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலை கோட்டத்தின் மூலம் 1.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, நேற்று முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப்பொறியாளர் நடராஜன், இளநிலை பொறியாளர் கார்த்திக், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் நாகராஜன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
05-Sep-2025