உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரோடு ேஷாவிற்கு அனுமதி கூடாது அனிபால் கென்னடி பேட்டி

 ரோடு ேஷாவிற்கு அனுமதி கூடாது அனிபால் கென்னடி பேட்டி

புதுச்சேரி: 'உப்பளம் மீன் அங்காடி விரைவில் திறக்கப்படும்' என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: உப்பளம் சாலையில் மீன் விற்பவர்களுக்காக நேதாஜி நகரில் ரூ.3 கோடி செலவில் புதிய மீன் அங்காடி கட்டப்பட்டு, 8 பெண்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆண்களும் சிலர் தங்களுக்கு கடை வேண்டும் என கேட்டனர். அவர்களுக்கு கடை ஒதுக்குவது குறித்து மீன்வளத்துறையிடம், மீனவ பஞ்சாயத்து மூலம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் மீன் அங்காடி திறக்கப்படும். த.வெ.க., தலைவர் விஜய் ஒரு நடிகர். அவரை பார்க்க தமிழக பகுதியில் இருந்து மக்கள் அதிகம் வருவார்க ள். அசம்பாவிதங்களை தவிர்க்க அவரது ரோடு ேஷாவிற்கு அரசு அனுமதி தரக்கூடாது. உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நடத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. போலி மருந்து விவகாரத்தில் அதிகாரிகள் மீது அரசு உரிய ந டவடிக்கை எடுக்க வேண்டும். யார் எந்த கட்சிக்கு சென்றாலும் எங்களுக்கு பயம் இல்லை. நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. தி.மு.க., அமைப் பாளர் சிவா முதல்வராக வர வேண்டும் என்பது என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ