உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உண்டியல் உடைத்து 2 கோவில்களில் திருட்டு

உண்டியல் உடைத்து 2 கோவில்களில் திருட்டு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே இரண்டு கோவில்களில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருமாம்பாக்கம் அடுத்த பள்ளக் கொரவள்ளிமேடு - சுள்ளியாங்குப்பம் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து, பூட்டிச் சென்றார்.வழக்கம் போல் நேற்று காலை பூசாரி கோவிலுக்கு சென்றபோது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்டு இருந்தது. காணிக்கை வேலும் சேதப்படுத்தபட்டு கிடந்தது.இதேபோல், கிருமாம்பாக்கம் முத்தாலம்மன் கோவில் அருகே மகா லிங்கேஸ்வரர் சுவாமி கோவிலுக்குள் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர். மேலும், கன்னியக்கோவிலில் உள்ள மெடிக்கல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடியுள்ளனர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ