ஹெல்மட் அணிவது குறித்து ரோபோ மூலம் விழிப்புணர்வு
வில்லியனுார்: வில்லியனுார் போக்குவரத்து போலீசார், ஹெல்மட் அணிவதின் அவசியம் குறித்து ரோபோட்டிக் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மட் அணிய வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வில்லியனுார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் வில்லியனுார் பைபாஸ், கூடப்பாக்கம் சிக்னலில் ரோபோட்டிக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு ெஹல்மட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.