அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
புதுச்சேரி: சென்னை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 150 நாட்களில் 150க்கும் மேற்பட்ட ரோபோடிக் மூட்டு, மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவ குழுவினர் சாதனை செய்துள்ளனர். ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மிகவும் சிக்கலான முழங்கால் பிரச்னைகளை, கையாண்டு, நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முற்றிய வாத நோயான (ஆர்த்ரிட்டீஸ்) நோயாளியின், வலியை போக்கவும், மூட்டு செயல்பாட்டை மீட்டெடுக்கவும், ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையில், முழங்கால், அமைப்பை ஒழுங்குப்படுத்தி, மாற்றப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம், பாதிக்கப்பட்ட நோயாளிகள், மூட்டு பகுதியை நீட்டவும், மடக்கவும், நடக்கவும் செய்கின்றனர். நோயாளிகளின் உடலமைப்பிற்கு ஏற்ற வகையில், துல்லியமாகவும், திட்டமிட்டு, அறுவை சிகிச்சை செய்வதால், திசு சேதமடைவது குறைக்கப்பட்டு, ஆயுள் காலமும் அதிகரிக்கிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை, வெங்கடரமணன் சாமிநாதன், தாமோதரன், செந்தில் கமலசேகரன், மதன் திருவேங்கடா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் செய்து சாதனை படைத்துள்ளனர். எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடரமணன் சாமிநாதன் கூறுகையில், 'ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன், செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல, எலும்பியல் பராமரிப்பில், மூட்டு சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். வலி இல்லாமல், மிக விரைவில் நோயாளிகள் மீண்டு வரமுடியும்' என்றார்.