மேலும் செய்திகள்
நேப்பியர் பாலத்தில் 'அனமார்பிக்' ஓவியங்கள்
10-Oct-2024
அரியாங்குப்பம் ; பாரதியார் பல்கலைக்கூடத்தில், நடந்த முகாமில், மாணவர்கள் பாறை ஓவியங்களை வரைந்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்திராகாந்தி தேசிய கலை மையம் மற்றும் அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடம் இணைந்து,பாறை ஓவியங்கள் வரையும் இரண்டு நாட்கள் முகாமை ஏற்பாடு செய்தது. அதன்படி, பல்கலைக்கூட மணிமண்டபத்தில், நேற்று முகாம் துவங்கியது.பல்கலைக்கூட முதல்வர் அன்னபூர்ணா தலைமை தாங்கினார். கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் முகாமை துவக்கி வைத்தார்.இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் இயக்குனர் கோபால் ஜெயராமன், நுண் கலைத் துறை தலைவர்பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தென்னிந்திய புவிச்சித்திர வரலாறு மற்றும் படைப்பாற்றல், செயல்முறை குறித்து, காந்திராஜன் சிறப்புரை ஆற்றினார்.முகாமில், இந்தியாவின் முக்கிய பாறை ஓவிய தளங்களில் காணப்படும், பொறிப்பு, செதுக்குதல், ஓவியங்கள், குறியீடுகள், சின்னங்களை அடிப்படையாகக் கொண்டு, நுண்கலை துறை மாணவர்கள் ஒவியங்கள் வரைந்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு நாளை சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
10-Oct-2024