உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொலை முயற்சி வழக்கில் ரவுடி கைது

கொலை முயற்சி வழக்கில் ரவுடி கைது

புதுச்சேரி: ஆபாசமாக பேசியதால் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்றேன் என, கைதான ரவுடி வாக்குமூலம் அளித்துள்ளார். கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரசூல் அகமது, 31. இவர், அதே பகுதியில் உள்ள செல்லப்பிராணி விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், நேற்று முன்தினம் காலை கருவடிக்குப்பத்தில் உள்ள சாராயக்கடையில் குடித்து விட்டு அங்கே படுத்திருந்தார். அங்கு முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்த பிரபல ரவுடி எழிலன், 30, குடிக்க வந்தார். அப்போது ரசூல் அகமது கால் எழிலன் மீது பட்டது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த எழிலன் அங்கு கிடந்த காணிக்கல்லை எடுத்து ரசூல் அகமது தலையில் நான்கு முறை போட்டு தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் அவரை, லாஸ்பேட்டை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, எழிலனை கைது செய்தனர். போதையில் ஏற்பட்ட தகராறின் போது,ரசூல் அகமது ஆபாசமாக பேசியதால் அவர் மீது கல்லை போட்டு கொல்ல முயன்றேன் என, எழிலன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை