ரூ. 1 லட்சம் கடன் வாங்க ரூ. 1.26 லட்சம் இழந்த பெண்
சைபர் கிரைம் கும்பல் மோசடிபுதுச்சேரி: புதுச்சேரியில் குறைந்த வட்டியில் ரூ. 1 லட்சம் கடன் பெற ரூ. 1.26 லட்சம் பணத்தை இழந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், பிரபல தனியார் பைனான்சில் கடன் வாங்கி தவணைகளை சரியாக செலுத்தி வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன், அப்பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் அதே பைனான்சில் ரூ. 1 லட்சம் கடன் உடனடியாக வாங்கி தருகிறேன் என, கூறினார்.தான் ஏற்கனவே வாங்கிய பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பேசுவதாக நினைத்து, மர்ம நபர் கூறியதை கேட்டு ஏற்கனவே கட்ட வேண்டிய நிலுவை தொகை மற்றும் புதிய கடனுக்கான செயலாக்க கட்டணம் என பல தவணையாக ரூ. 1.26 லட்சம் பணம் அனுப்பினார். ஐந்து நாட்கள் கடந்தும் கடன் தொகை கிடைக்காததால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில், அப்பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் டில்லி அருகில் இருப்பது தெரியவந்தது.சைபர் கிரைம் போலீஸ் கூறுகையில், 'இந்த ஆண்டு மட்டும் 122 பேர், தனியார் பைனான்ஸ் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருகிறோம் என, சைபர் கிரைம் மோசடிக்காரர்கள் நம்ப வைத்து பல லட்சம் ஏமாற்றியுள்ளனர்.குறைந்த வட்டிக்கு பணம் தருகிறோம் என, யாரேனும் கூறினால் நம்ப வேண்டாம்' என்றனர்.