புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 1.15 லட்சம் அபேஸ்
புதுச்சேரி : புதுச்சேரியில் 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1.15 லட்சம் இழந்துள்ளனர். வைத்திக்குப்பத்தை சேர்ந்த நபரை, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு, மர்மநபர் நட்பாக பேசி பழகியுள்ளார். பின், அதிக மதிப்பு மிக்க பொருள் ஒன்றை பார்சலில் அனுப்புவதாகவும், அதனை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும்படி தெரி வித்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு பின், அவரது வீட்டிற்கு வந்த பார்சலை, ரூ. 93 ஆயிரத்து 500 செலுத்தி பெற்றார். ஆனால், பார்சலில் மர்மநபர் தெரிவித்த பொருள் இல்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரிய வந்தது. இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 11 ஆயிரத்து 300, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 5 ஆயிரம், மற்றும் 4 ஆயிரம், கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் 2 ஆயிரம் என, 5 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 800 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.