கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கல்
அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் கோவில் திருப்பணிக்காக 15 லட்சம் ரூபாயை சபாநாயகர் செல்வம் திருப்பணிக் குழுவினரிடம் வழங்கினார். மணவெளி தொகுதி, பூரணாங்குப்பம் கிராமத்தில் அய்யனார் மற்றும் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணிக்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில், 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் நிதி வழங்கலுக்கான காசோலையை கோவில் திருப்பணி குழுவினரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன் மற்றும் கோவில் திருப்பணி குழுவினர், கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.