உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரூ. 26 ஆயிரம் மதுபாட்டில் காரைக்காலில் பறிமுதல்

 ரூ. 26 ஆயிரம் மதுபாட்டில் காரைக்காலில் பறிமுதல்

காரைக்கால்: காரைக்காலில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 26 ஆயிரம் மதிப்புள்ள பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் மதகடி பொலிக்கன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக பீர் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலால்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், கலால்துறை அதிகாரி பொய்யாதமூர்த்தி தலைமையிலான குழுவினர், அந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26,500 ரூபாய் மதிப்புள்ள 17 கேஸ் பீர் பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுக்குறித்து அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை