மேலும் செய்திகள்
புதுச்சேரியில், 4 பேரிடம் ரூ. 41.53 லட்சம் மோசடி
01-Oct-2024
புதுச்சேரி : தொலை தொடர்பு அதிகாரி போல பேசி, 4.66 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரிடம் தொலை தொடர்பு அதிகாரி பேசுவதாக கூறிய மர்ம நபர் ஒருவர் உங்களின் ஆதார் எண், மொபைல் எண் பிளாக் ஆகி விட்டதால், இனிமேல் பயன்படுத்த முடியாது. அதனை விடுக்க உடனடியாக அபராதம் கட்ட வேண்டும் என கூறினார். அதை நம்பி, யுவராஜ், ரூ.4.66 லட்சம் ஆன்லைன் மூலம் அந்த நபருக்கு அனுப்பினார். அதனை அடுத்து, அந்த நபரை தொடர்பு கொண்ட போது, இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.பின்னர் தான் மோசடி நபர் என தெரிய வந்தது. இதுகுறித்து, அவர் நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.
01-Oct-2024