உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி நபரிடம் ரூ. 88,000 அபேஸ்

புதுச்சேரி நபரிடம் ரூ. 88,000 அபேஸ்

புதுச்சேரி: அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதை நம்பிய கார்த்திக், மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 88 ஆயிரத்து 649 ரூபாய் முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்தார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. அதன் பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி