மேலும் செய்திகள்
தொகுதி மேம்பாட்டு பணி ஆலோசனை கூட்டம்
1 minute ago
இன்றைய மின்தடை
1 minute ago
கழிவுநீர் வாய்க்கால் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
2 minutes ago
இடிந்து விழும் மதில்… பெயர்ந்து சிதறும் கண்ணாடி…
2 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 13. 24 லட்சம் இழந்துள்ளனர். மூலக்குளத்தை சேர்ந்த பெண்ணை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 11 லட்சத்து 50 ஆயிரத்து 426 முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. இதேபோல், வாணரப்பேட்டையை சேர்ந்தவர் 1 லட்சத்து 24 ஆயிரத்து 507, வில்லியனுாரை சேர்ந்தவர் 29 ஆயிரத்து 397 உள்ளிட்ட 7 பேர் 13 லட்சத்து 24 ஆயிரத்த 480 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 minute ago
1 minute ago
2 minutes ago
2 minutes ago