உள்ளூர் செய்திகள்

மணல் திருட்டு

காரைக்கால்: காரைக்காலில் மணல் திருட்டு தொடர்பாக ஜே.சி.பி., வாகன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். காரைக்கால், செனியார் குளத்துத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகநாதன், 59. இவரக்கு சொந்தமான மணல், மாரியம் அவென்யூ சாலையில், முருகரம் திரையரங்கம் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாரியம் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அருமைநாதன் என்பவர் தனது ஜே.சி.பி., வாகனத்தைப் பயன்படுத்தி 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மணலை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட சண்முகநாதனை அருமைநாதன், மிரட்டியுள்ளார். இது குறித்து நகர காவல்நிலையத்தில் சண்முகநாதன் அளித்த புகாரின் பேரில் அருமைநாதன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்