பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் வெங்டாஜலபதிக்கு சந்தனக்காப்பு
புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீவாரி வெங்டாஜலபதி சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திண்டினம் - சாலையில், மத்திய திருப்பதி என அழைக்கப்படும், பஞ்சவடீ ஆஞ்நேயர் கோவில் உள்ளது. நேற்று இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையுடன், தீபாராதனை நடந்தது. வரும் 3ம் தேதி திருப்பாவாடை சேவை, வரும் 5ம் தேதி மூன்றாம் சனிக்கிழமையன்று முத்தங்கி சேவை, 12ம் தேதி, நான்காம் சனிக்கிழமை பூவங்கி சேவை நடக்கிறது.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள பந்தலில், உற்சவர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று நடந்த சந்தனக்காப்பு அலங்கார உற்சவ நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.