உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சங்க இலக்கியத் திருவிழா

 சங்க இலக்கியத் திருவிழா

பாகூர்: சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், சங்க இலக்கியத் திருவிழா மற்றும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில், நடந்த சங்க இலக்கிய திருவிழாவில், சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மண்டல அமைப்பாளர் பவித்ரா வரவேற்றார். சங்க நிறுவனர் செல்வி முன்னிலை வகித்தார். ஆலோசகர் வரலாற்று விரிவுரையாளர் முத்து ஐயா சாமி, சுரங்கத்துறை பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மண்டல அமைப்பாளர்கள் ரவி, முரசொலிமாறன், இசைமொழி ஆகியோர் பாராட்டி பேசினர். மாணவிகள் கார்த்திகா, சரினா, சோபியா, காவியா, சாதனா ஆகியோர் சங்க இலக்கியங்களின் பதினெட்டு நுால்கள் குறித்து விளக்கமளித்தனர். மாணவிகள் ராஜஸ்ரீ, பூரணி, சிவசங்கரி, செல்வி, ரஷ்சிதா, சங்க இலக்கியங்களில் அகம் குறித்து விளக்கினர். மாணவிகள் சுடர்விழி, ஸ்ரீநதி, போனிஷா, சாரதா, பிருத்திகா, சங்க இலக்கியங்களில் புறம் குறித்து விளக்கினர். சங்க இலக்கியத் திருவிழாவில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மண்டல அமைப்பாளர் மாதவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை