உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி.,யாக சத்தியசுந்தரம் நியமனம்

சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி.,யாக சத்தியசுந்தரம் நியமனம்

புதுச்சேரி : சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி.,யாக சத்திய சுந்தரமும், சீனியர் எஸ்.பி.,யாக கலைவாணன் நியமிக்கப்பட்டுள்ளனர். கவர்னர் பரிந்துரையின்பேரில், புதுச்சேரி போலீசில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளும், இடமாற்றமும் செய்யப்பட்டனர். அதன்படி, புதுச்சேரி போலீசில் சமீபத்தில் பொறுப்பேற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சத்திய சுந்தரம், சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி.,யாகவும், ஏற்கனவே உள்ள டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார் யாதவ்க்கு, ஆயுதப்படை மற்றும் பயிற்சி பிரிவு வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவும், கூடுதலாக ஐ.ஆர்.பி.என்., கமாண்டன்ட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் மற்றும் புலனாய்வு சீனியர் எஸ்.பி., கலைவாணன், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, காரைக்கால் மாவட்ட சீனியர் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ்., அதிகாரி இஷா சிங்., கிழக்கு பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தலைமை செயலர் சரத் சவுக்கான் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை