பட்டியலின மாணவர்களுக்கு ரூ.49.90 கோடி கல்வி உதவித்தொகை
புதுச்சேரி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் ரூ.49.90 கோடி கல்வி உதவித் தொகை வழங்க உள்ளதாக இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு இந்த நிதியாண்டில், இதுவரை ரூ.12.01 கோடி நிதியுதவி வங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த நிதியாண்டில், திருமண உதவித் தொகையாக 396 பேருக்கு ரூ.3.96 கோடியும், கலப்பு திருமண உதவித்தொகையாக 80 தம்பதிகளுக்கு ரூ.2 கோடி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 118 பயனாளிகளுக்கு மாநில அரசின் பங்காக, ரூ.1.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.பாலுாட்டும் தாய்மார்கள் 592 பேருக்கு மொத்தம் ரூ.89.89 லட்சமும், தொடர் நோய் உதவித் தொகை திட்டத்தில் 2,281 பேருக்கு மொத்தம் ரூ.1.57 கோடி வழங்கப்பட்டுள்ளது.வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.2.59 கோடி, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையைாக ரூ.49.90 கோடி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.