சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்
புதுச்சேரி: சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியின் 1993ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.இந்தாண்டு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ராஜ்நிவாசில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் உதவி தொகை வழங்கப்பட்டது. உதவித்தொகை பெற்ற மாணவர்கள் கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியன், கலைமதி, செந்தில்குமார், இளந்திரையன், குமரேஷ் பாபு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., சட்டக் கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன் உடனிருந்தனர்.