மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
23-Sep-2026
புதுச்சேரி: திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் துவக்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, பாராட்டினார். தலைமை ஆசிரியர் அனிதாகுமாரி முன்னிலை வகித்தார். அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் தொடர்பான 150க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் சுரேஷ், ராஜசேகர் சசிரேகா, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
23-Sep-2026