ஒரு வாரம் விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறப்பு
புதுச்சேரி: பெஞ்சல் புயல் கரையை கடந்த பின்பு, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக சாத்தனுார், வீடூர் அணை திறக்கப்பட்டது.இதனால் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. பாகூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 20 கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்தது. பெஞ்சல் புயல் மற்றும் ஆற்றின் கரையோரத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் கடந்த 27ம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஒரு வாரம் விடுமுறைக்கு பின், நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.