புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் கலை சார்ந்த அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு மாணவர்களின் ஆராய்ச்சி படைப்புகளை பாரா ட்டி வாழ்த்தினர். க ண்காட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் அறிவியல், நீர் தர கண்காணிப்பு செயல்பாடு, அனுபவ கற்றல், பொறியியல், உயிரியல், பன்முக பயன்பாட்டு அறிவியல், விமானவியல், உயிரி எரிபொருள் உற்பத்தி, பொது சுகாதார கொள்கை பகுப்பாய்வு, நிலையான கட்டமைப்பு, தடயவியல், உயிர்வேதியியல் பயன்பாடுகள். மரபணு திருத்தம், நுண்ணுயிர் எரிபொருள் செல்கள், நரம்பியல் சிதைவு நோய் ஆராய்ச்சி, கணக்கீட்டு வேதியியல், மருத்துவ ஆராய்ச்சி, எக்ஸோஸ் கெலட்டன், சிலிக்கான் சில்லுகளில் செயற்கை நியூரான்கள், சென்சார்கள், இயந்திர கற்றலை ஒருங்கிணைத்தல், 3டி அச்சிடும் பயன்பாடுகள். குவாண்டம் கம்ப்யூட்டிங் உருவகப்படுத்துதல், கணித மாடலிங், தொற்றுநோயியல், வருங்கால தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. சிறந்த அறிவியல் மாதிரிகள் செய்த மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.