உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அன்பாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அன்பாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி சாந்தி நகரில் உள்ள அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி நிர்வாகிகள் வளர்மதிஅன்பழகன், உமாசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் அன்பழகன் கண்காட்சியை திறந்து வைத்து, மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். முன்னதாக அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினார். மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கினர். பிற பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள,் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை