உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: நெல்லித்தோப்பு, மகாத்மா காந்தி அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியர் அனுசியா வரவேற்றார். தலைமை ஆசிரியை சார்மி ஜோஸ்பின் தலைமை தாங்கினார். ஆசிரியர் தேவி கன்னியாகுமரி முன்னிலை வகித்தார். ஆசிரியை சுமதி சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக, முத்திரையர்பாளையம் அருட்செல்வி ஆயியம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை, ஏஞ்சலின் ஜெயம் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து, பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் தமிஸ் முகமது உசேன், அய்யனார், மேகலா, பிருந்தா, மணிமேகலை, குணசுந்தரி, கவுசல்யா உட்பட பலர் பங்கேற்றனர். கண்காட்சியில், அறிவியல் தொழில்நுட்பங்கள் பற்றிய மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை