உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருக்கனுார்: திருக்கனுார் அருகே உள்ள வம்புபட்டு அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. வட்டம் - 5, பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் துவக்கி வைத்தார். பள்ளி பொறுப்பாசிரியர் கந்தவேல் தலைமை தாங்கினார். ஆசிரியை சுஜிதா நிகழ்ச்சியை, தொகுத்து வழங்கினார். கண்காட்சியில், செயற்கைகோள் மாதிரி, சொட்டு நீர் பாசனம், பெரிஸ்கோப் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பாலாஜி, கவிதாமணி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை மேரி பிரின்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை