உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமச்சந்திரா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ராமச்சந்திரா பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வில்லியனுார் : அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சி துவக்க விழாவிற்கு பள்ளி தாளாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாக அலுவலர் ராம்பிரசாத் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், பங்கேற்று கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் பள்ளி மாணவர்களின் சார்பில், 600க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றது. அறிவியல் கண்காட்சியை அரியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கண்டுகளித்தனர். கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற அறிவியல் படைப்புளுக்கு மணக்குப்பம் சுவாமி விவேகானந்தா பள்ளி தாளாளர் மோகன்தாஸ் பரிசுகளை வழங்கி, பாராட்டினார். கண்காட்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வீரப்பன், அருட்குரு, வினோத், மோகன், சந்திரசேகரன், வீரலட்சுமி, ராஜம், தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை