உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

பாகூர்: கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் அறி வியல் கண்காட்சி நடந்தது.தலைமையாசிரியை செல்வாம்பாள் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ராஜசேகர் கண்காட்சியை திறந்து வைத்தார். பசுமை வீடு, ராக்கெட், மழை எச்சரிக்கை கடிகாரம், வளி மண்டல அடுக்குகள், சுத்திகரிப்பு கருவி உள்ளிட்ட மாதிரிகளை உருவாக்கி மாணவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.ஆசிரியர்கள் கேசவர்த்தினி, வனிதா, சரண்யா, திவ்யா, வசந்தி, ஆயிஷா, கிருஷ்ணப் பிரியா, தனலட்சுமி, கலைச்செல்வி, சண்முகபிரியா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், ஊழியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை