மேலும் செய்திகள்
ஆலங்குப்பம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
09-Nov-2024
புதுச்சேரி : காலாப்பட்டு குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி துணை ஆய்வாளர் வட்டம் - 1 குலசேகரன் தலைமை தாங்கினார். ஆசிரியை வரலட்சுமி வரவேற்றார். எம்.எம்.சி., தலைவர் வெங்கடேசன் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்களின் நுாற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு, சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ரமா, ஆசிரியர்கள் சங்கர்தேவி, வரலட்சுமி, புஷ்பரேகா, பாத்திமா,விஜயலட்சுமி, அபிராமி, கவிதா மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.
09-Nov-2024