அரிச்சுவடி நுாலகத்தில் அறிவியல் கண்காட்சி
புதுச்சேரி, : புதுச்சேரி மதிஒளியின் அரிச்சுவடி நுாலகத்தில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது. புதுச்சேரி மூலக்குளத்தில் மதிஒளியின் அரிச்சுவடி பொது நுாலகம் இயங்கி வருகிறது. நுாலகத்தில் 5 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவு சார்ந்த கருப்பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட அறிவியல் கண்காட்சி கடந்த 3ம் தேதி துவங்கி இன்று வரை நடக்கிறது. கண்காட்சியை புதுச்சேரி பல்கலைக்கழக மத்திய மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவு துணை விரிவுரையாளர் சுடலை துவக்கி வைத்து பார்வையிட்டார்.கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நுாலக நிறுவனர் மதிஒளி சரஸ்வதி நினைவு நாளான இன்று சான்றிதழ் வழங்கப்படுகிறது. நுாலகம் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை இயங்குகிறது. இங்கு, புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் என 15,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. நுாலகத்தில் 1800 பேர் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.