மேலும் செய்திகள்
அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
07-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி எக்கோல் ஆங்கிலஸ் அரசு துவக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் துவக்கி வைத்தார். கண்காட்சியில் நீர் மேலாண்மை, சுற்று சூழல் மாசுப்பாடு, இயற்கை விவசாயம், டெங்கு நோய் தடுப்பு, சிறுதானிய உணவகங்கள், அலுமினிய பாத்திரங்கள் தவிர்த்தல் தலைப்புகளில் படைப்புகள் காட்சி படுத்தப்பட்டன. கண்காட்சியை பெற்றோர்கள், பிற பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.ஒவ்வொரு வகுப்புகளில் இருந்தும் முதல் 3 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யபட்டு, அவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
07-Oct-2024