உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்கூட்டர் திருட்டு

 ஸ்கூட்டர் திருட்டு

புதுச்சேரி: வாகன காப்பகத்தில் இருந்து ஸ்கூட்டரை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 39. இவர், புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பகத்தில், வேலை செய்து வருகிறார். இவரது காப்பகத்தில் கடந்த மாதம் 25ம் தேதி மர்ம நபர் ஒருவர் டோக்கன் தராமல், ஸ்கூட்டரை (பி.ஒய் 01 ஏ.டபள்யூ 3602) எடுத்து சென்றுவிட்டார். பின், இரு நாட்கள் கழித்து, நல்லவாடு ரோடு, பிள்ளையார்திட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி டோக்கனுடன் தனது ஸ்கூட்டரை எடுக்க வந்தார். அப்போது தான் மர்ம நபர் ஸ்கூட்டரை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து வாகன காப்பக ஊழியர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை