உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உளுந்து பயிர் விதை நேர்த்தி

உளுந்து பயிர் விதை நேர்த்தி

பாகூர் : குருவிநத்தம் கிராமத்தில், ஊரக வேளாண் பயிற்சியின் கீழ்,உளுந்து பயிரில் உயிரியல் விதை நேர்த்தி செய்வது தொடர்பான செயல் விளக்க முகாம் நடந்தது.புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் செயல்படும், வேளாண் அறிவியல் கல்லுாரியில் பயிலும் இளநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் பாகூர் பகுதியில் ஊரக வேளாண் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக பாகூர் உழவர் உதவியகம் சார்பில், குருவிநத்தம் கிராமத்தில் விவசாயி வீரப்பன் என்பவரின் நிலத்தில் உளுந்து பயிரில் உயிரியல் விதை நேர்த்தி செய்வது தொடர்பான செயல் முறை விளக்க முகாம் நடந்தது.பாகூர் வேளாண் அலுவலர் பரமநாதன், ஆத்மா திட்ட மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமில், உளுந்து பயிரில் விதை நேர்த்தி செய்வது தொடர்பாக மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை