உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை பணியிடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

மின்துறை பணியிடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: மின்துறை 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மின் துறையில் 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் புதுச்சேரியில் இருந்து 859, காரைக்கால் 219, மாகே 65, ஏனாம் 97 என மொத்தம் 1240 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 71 விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டன. இதில் 18 பணியிடங்களை நிரப்ப முடியாத சூழலில், மீதமுள்ள 159 பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பெற்ற இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில், பிராந்திய வாரியாக மற்றும் பிரிவு வாரியாக தேர்வுப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காத்திருப்பு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி