உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தற்காப்பு பயிற்சி நிறைவு விழா

 தற்காப்பு பயிற்சி நிறைவு விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், மாணவியருக்கான தற்காப்பு பயிற்சி நிறைவு விழா நடந்தது. ஆசிரியர் இர்வின்மலோ வரவேற்றார். தலைமையாசிரியர் மரிய மார்ட்டின் தலைமை தாங்கினார். கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர் குமரன், மாணவியருக்கு தற்காப்பு கலை செயல்முறை விளக்கம் அளித்தார். புதுச்சேரி போக்குவரத்து கிழக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தற்காப்பு கலையின் அவசியம் குறித்து பேசி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் இந்துமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை