உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜேஸ்வரி கல்லுாரியில் தற்காப்பு பயிற்சி பட்டறை

ராஜேஸ்வரி கல்லுாரியில் தற்காப்பு பயிற்சி பட்டறை

மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பொம்மைய பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி பட்டறை நடந்தது. தற்காப்பு, அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மையப்படுத்தி, பெண்களுக்கான தற்காப்பு பயிற்சிப் பட்டறைக்கு, கல்லுாரி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் பூமாதேவி முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை பேராசிரியர் தேவி வரவேற்றார். புதுச்சேரி பெண் போலீஸ் ஹேமமாலினி பயிற்சி அளித்தார். மேலும் குற்றமில்லா சமுதாயம் உருவாக்குவது குறித்து மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேராசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை