உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளைஞர்களுக்கு இனிப்பான பட்ஜெட் செல்வகணபதி எம்.பி., கருத்து

இளைஞர்களுக்கு இனிப்பான பட்ஜெட் செல்வகணபதி எம்.பி., கருத்து

புதுச்சேரி : இளைஞர்களுக்கு இனிப் பான, பெண்களுக்கு உத்வேகம் தரும் பட்ஜெட் என செல்வகணபதி எம்.பி., கருத்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;இளைஞர்களுக்கு இனிப்பான மற்றும் பெண்கள் முன்னேற உத்வேகம் தரும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர மக்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பாராட்டு பெறும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வேளாண் உற்பத்தியில் இந்திய ஏற்றுமதி அதிகரிக்க திட்டம், 7.7 கோடி விவசாயிகளுக்கு கடன் வசதிகள் அதிகரிப்பு, கிசான் கிரெடிட் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் கடன் வசதி, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக கடன் பெறுவதற்கான அறிவிப்பு, திறன் மேம்பாட்டிற்கு 5 இடங்களில் சர்வதேச தரத்தில் சிறப்பு மையங்கள், காலணி தொழிலில்22 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, மாநிலங்களுக்கு கடன் வழங்க ரூ. 1.5 லட்சம் கோடி ஒதுக்கியது.புற்றுநோய் உட்பட 36 வகை நோய்களுக்கான மருந்துக்கு சுங்க வரி முற்றிலும் நீக்கியது, மொபைல்போன், எல்.இ.டி., டி.வி., பேட்டரி வாகனங்களுக்கு வரி குறைப்பு, மூல தன செலவினத்திற்கு ரூ. 10.83 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருமான வரி விலக்கு அறிவிப்பு, தொழில் முனை வோர்களுக்கு ஸ்டார்ட் அப் தொழில் கடன் என ஏராளமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !