பல்கலையில்., கருத்தரங்கம்
புதுச்சேரி: பல்கலைக்கழக வேதியியல் துறை, மருந்து கட்டுபாட்டு துறை மற்றும் ஆயுஷ் இயக்குநரகம் இணைந்து, தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர்பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். காஷ்மீர் மாநில மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத், ஆயஷ் இயக்குனரகத்தின், மூத்த தலைமை அதிகாரி ஸ்ரீதரன்,பேராசிரியர்கள் சிவசங்கர், தரணிகரசு, சிப்நாத்தேப், ஜெயக்குமார், கந்தசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதா தயாரிப்பாளர்கள் சங்கம், புதுச்சேரி மருந்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.