உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுயமுன்னேற்ற சிந்தனைகள் குறித்த கருத்தரங்கம்

சுயமுன்னேற்ற சிந்தனைகள் குறித்த கருத்தரங்கம்

புதுச்சேரி : வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், சுயமுன்னேற்ற சிந்தனைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆல்பர்ட் ரமணா வரவேற்றார். தாகூர் கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார் பங்கேற்று, மனிதனின் சிந்தனை ஆற்றலை கூர்மை ஆக்குவது கல்வி தான்.நற்சிந்தனையும், நல்லறிவும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானது.அதனை தடை செய்ய முடியாது. மாணவர் தலைமுறை தன்னிடத்தில் புதைந்திருக்கும் நல்லாற்றலை உணர்ந்து, கல்விப் பாதையில் நம்பிக்கையுடன் உழைத்தால் முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும்' என்றார்.இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அருள், பழனிவேலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பங்கேற்று கருத்துகளை தெரிவித்த மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை