உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெள்ளத்தில் மூழ்கிய எலக்ட்ரிக்கல் பைக், கார்களை மீட்பது எப்படி சர்வீஸ் மேலாளர்கள் தகவல் 

வெள்ளத்தில் மூழ்கிய எலக்ட்ரிக்கல் பைக், கார்களை மீட்பது எப்படி சர்வீஸ் மேலாளர்கள் தகவல் 

புதுச்சேரி: வெள்ளத்தில் மூழ்கிய எலக்ட்ரிக்கல் கார், பைக்குகளை மீட்பது எப்படி என டீலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கொட்டிய மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட கார்கள், 500க்கும் மேற்பட்ட பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கியது.வழக்கமான பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்கள் மழை நீரில் மூழ்கினால் ஸ்டார்ட் செய்யாமல், டோப் செய்து சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். அதபோல் மழைநீரில் மூழ்கிய எலக்ட்ரிக்கல் கார் மற்றும் பைக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என கார் மற்றும் பைக் ேஷாரும் டீலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எலக்ட்ரிக்கல் கார்களின் சர்வீஸ் மேலாளர்கள் கூறியதாவது; மழைநீரில் எலக்ட்ரிக்கல் கார்கள் செல்ல முடியும். பேட்டரிகள் அனைத்தும் 'வாட்டர் புருப்' கொண்டது. மோட்டார் நனைந்தால் பிரச்னை. வெள்ள நீரில் கார் மூழ்கினால் 'ரிஸ்க்' அதிகம். 'சார்ட் சர்க்யூட்' அதிகம் ஏற்படும். பேட்டரி வரை தண்ணீர் மூழ்கினால் மோட்டாரிலும் நீர் செல்லும். கீயர் பாக்ஸ், எலட்ரிக்கல் பாகங்கள் பாதிக்கப்படும். லாக்கில் உள்ள எலட்ரிக்கல் கார் நகர்த்த முடியாது. அதனால் டீலர்களை தொடர்பு கொண்டு பேசினால், சர்வீஸ் நிபுணர்கள் காரை பார்வையிட்டு காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல உதவி செய்வர்.எலக்ட்ரிக்கல் பைக் சர்வீஸ் மேலாளர்கள் கூறியதாவது; எலக்ட்ரிக்கல் பைக்குகள் முழுதும் நீரில் மூழ்கினால், சுவிட் ஆன் செய்யாமல், அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் கொண்டு சென்று கொடுத்தால் சரிசெய்ய முடியும். பேட்டரி நனைந்த பின்பு பைக்கை ஆன் செய்தால் தீ பற்ற கூட வாய்ப்பு உள்ளது. எனவே 100 சதவீதம் ஆன் செய்ய கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் பைக்குகள் பழுதுகளை இன்சூரன்ஸ் மூலம் சரி செய்து கொள்ள முடியும் என தெரிவித்தனர். டாடா சக்ராலயா: 6383913021 / 6383913022 மகேந்திரா சங்காலயா: 6383913012 / 6383913013ராஜ் விஜய் டி.வி.எஸ்: 9629961020 / 9244545422ஜே.கே.டி.வி.எஸ்.: 98423 99589


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை