மேலும் செய்திகள்
வாய்க்கால்கள் துார்வார தி.மு.க., கோரிக்கை மனு
29-Oct-2025
புதுச்சேரி: இந்திய கம்யூ., நிர்வாக குழு உறுப்பினரும், ஏ.ஐ,டி,யூ.சி., தொழிற்சங்க மாநில பொது செயலாளருமான சேது செல்வம் நேற்று தனது பொறுப்புகளில் இருந்து விலகினார். இதுகுறித்து அவர், கூறியதாவது: இந்திய கம்யூ., கட்சியில் 35 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். தொழிலாளர் பிரச்னைகளுக்காக போராட்டங்கள் நடத்தியதால், என் மீது 27 வழக்குகள் உள்ளது. கட்சியில் எனது வளர்ச்சி சிலருக்கு பிடிக்காததால், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கட்சி தலைமைக்கு தெரிவித்து வந்தனர். குறிப்பாக, நாரா கலைநாதன் ஆகியோர் கூட்டு சேர்ந்து எனது வளர்ச்சியை தடுக்கும் வகையில் செயல்படுகின்றனர். இவற்றை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, கட்சியில் இருந்து விலகியுள்ளேன். வரும் சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட போகிறேன். என்னுடன் சேர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் விலகியுள்ளனர். தொடர்ந்து தட்டாஞ்சாவடியில் மக்கள் பணியை துவங்க உள்ளேன். எனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்' என்றார்.
29-Oct-2025