வேளாண் அலுவலகத்தில் சேவா பக்வாடா நிகழ்ச்சி
வில்லியனுார் : புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சேவா பக்வாடா நிகழ்ச்சி வில்லியனுார் இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பாகூர் வேளாண் கோட்ட துணை வேளாண் இயக்குனர் குமாரவேலு தலைமை தாங்கினார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி பாமகள்கவிதை பங்கேற்று தொற்றாத நோய்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வில்லியனுார் மற்றும் ஒதியம்பட் உழவர் உதவியகத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வில்லியனுார் உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.