முருங்கப்பாக்கத்தில் கழிவுநீர் வாய்க்கால் பணி
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதி, முருங்கப்பாக்கத்தில், 26.58 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகரில், கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல முடியாமல், சாலையில் தேங்கி நிற்பதால், நகர மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். தொகுதி எம்.எல்.ஏ.,விடம் நகர மக்கள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 26.58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் ஞானசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.