மேலும் செய்திகள்
பொங்கலோ பொங்கல்; பள்ளிகளில் உற்சாக கொண்டாட்டம்
14-Jan-2026
வில்லியனுார்: சங்கர்'ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். வில்லியனுார் சங்கர்'ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 41வது ஆண்டு விழா திருகாமீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கரா கல்வி குழுமத் தலைவர் சத்யகுமாரிகோவிந்தராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சுகந்தி வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலைமாமணி அரிமதி இளம்பரிதி மற்றும் பள்ளி முன்னாள் மாணவியும், மத்திய அரசு டாக்டர் மின் மினிமோகன்தாஸ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வழக்கறிஞர் சங்கரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, பள்ளியில் பல்வேறு போட்டிகள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை அஸ்வனியா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் சுந்தரகணேஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.
14-Jan-2026