மேலும் செய்திகள்
ஜூஸ் கடையில் திருட்டு சேலம் வாலிபர் கைது
27-Jul-2025
திருபுவனை: திருபுவனையை சேர்ந்தவர் நாகராஜ், 47; திருவாண்டார்கோவில் மெயின் ரோட்டில் தார்ப்பாய் மொத்த வியாபாரம் செய்யும்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல், கடந்த 12ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை 8;00 மணிக்கு கடையை திறக்க வந்தபோது, ஷட்டரின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரில் இருந்த 63 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. நாகராஜ் புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
27-Jul-2025