உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி சித்தர்கள் மாநாடு

 புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி சித்தர்கள் மாநாடு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் மார்ச் 1ம் தேதி சித்தர்கள் மாநாடு நடக்கிறது. மன அமைதிக்கான ஆன்மிக மையம், அகில பாரத இந்து மகா சபையின் புதுச்சேரி கிளை மற்றும் அகில உலக ஆன்மிகப் பேரவை சார்பில், வரும் மார்ச் 1ம் தேதி, புதுச்சேரியில் சித்தர்கள் மாநாடு மற்றும் அசுவமேத யாகம் நடக்கிறது. முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மந்தக்கரையில் நடக்கும் மாநாட்டிற்கு அகில உலக ஆன்மிகப் பேரவை நிறுவனர் தெய்வசிகாமணி சுவாமி தலைமை தாங்குகிறார். அகில பாரத இந்து மகா சபா புதுச்சேரி தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகிக்கிறார். மாநாட்டில், ஆதினங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், சாதுக்கள், சன்னியாசிகள் மற்றும் துறவிகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து உலகில் சமாதானம் மற்றும் அமைதி நிலவ வேண்டி அசுவமேத யாகம் நடக்கிறது. இந்த யாக வேள்வியில் பங்கேற்க விரும்புவோர், ரூ.501 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரம் வேண்டுவோர் 96778 08242 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இத்தகவலை அகில பாரத இந்து மகா சபா புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ