உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்த மருத்துவம் விழிப்புணர்வு ஊர்வலம்

சித்த மருத்துவம் விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த சித்த மருத்துவம் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் சித்த மருத்துவ பிரிவு சார்பில், அகத்தியர் பிறந்த நாள் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட உள்ளது. இதன் முன் நிகழ்வாக, சித்த மருத்துவ பிரிவை சேர்ந்த டாக்டர்கள், மருந்தாளர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில், சித்த மருத்துவ சிறப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் ஆயுஷ் இயக்குநரகத்தில் இருந்து நேற்று புறப்பட்டது.ஊர்வலத்தை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயுஷ் துறை இயக்குநர் ஸ்ரீதரன் மற்றும் வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனை கண்காணிப்பாளர் இந்திரா ஆகியோர் செய்தனர்.சித்த மருத்துவ விழிப்புணர்வு ஊர்வலம், சட்டசபை வளாகத்தில் தொடங்கி சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, அண்ணாசாலை வழியாக ஒதியஞ்சாலை நலவழி மையத்தை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை