உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சித்தர் குருபூஜை விழா

 சித்தர் குருபூஜை விழா

பாகூர்: சோரியங்குப்பம் உலகநாத களரானந்த சித்தர் குருபூஜை விழா இன்று (19ம் தேதி) நடக்கிறது. பாகூர் அடுத்த சோரியங்குப்பம் கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உலகநாத களரானந்த சித்தர் பீடம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று குருபூஜை விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசை குரு பூஜை விழா இன்று (19ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 7:00 மணியளவில் சித்தரின் திருவுருவச் சிலை வீதியுலா நடைபெறும். மதியம் 12:00 மணியளவில் சிறப்புப் படையலுக்குப் பின்னர், அன்னதானம் வழங்கப்படும். வழிபாட்டில், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைக்க உள்ளார். ஏற்பாடுகளை, சோரியாங்குப்பம் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்